Sunday, September 30, 2012

எம்.ஆர்.ராதா

''நடிகவேள் எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.

அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர்.

அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார்.

அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா.

ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்! "
Like · ·

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.
நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

- கார்த்திகா குமாரி

Friday, September 28, 2012

SMALL IS GREAT....


ள் வளர்ந்தால் மட்டும் போதாது. அறிவும் பொறுப்புகளும் வளர வேண்டும். நாம் பார்க்கும் இந்த ஹீரோ ஆள் மட்டும்தான் வளரவில்லை. ஆனால், அறிவும் பொறுப்புகளும் சராசரி மனிதர்களைவிட அதிகமாகவே வளர்ந்து இருக்கின்றன!

பெரியசாமியின் உயரம் ஒன்றே முக்கால் அடி மட்டுமே. தன் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து, தனக்கு இருக்கும் இசை ஆர்வத்தால் இசையை முறையாகக் கற்றுக்கொண்டு கச்சேரிகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.



பெரியசாமியைச் சந்தித்துப் பேசினேன். ''என் சொந்த ஊர் ஆத்தூர், தம்மம்பட்டி அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராமம். நான்தான் வீட்டுக்கு மூத்த மகன். ஒரு தங்கச்சி இருக்கிறா. அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய்தான் எங்க ரெண்டு பேரையும் படிக்கவெச்சாங்க. எனக்கு இப்ப 16 வயசு ஆகுது. நான் சின்ன வயசுல நல்லா, அழகா இருந்தேனு எங்க அம்மா சொல்வாங்க. அதனால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தூக்கிட்டுப் போயிடுவாங்களாம். வயசு கூடக் கூட ஆள் வளருவானானு பார்த்தாங்களாம். என் கூட்டாளிங்க எல்லாம் பனை மரம் மாதிரி வளர்ந்துட்டாங்க. நான் ஒண்ணே முக்கால் அடிதான் வளந்தேன்.

நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்பா என்னைத் தூக்கிக்கிட்டு டாக்டர்கிட்ட போனார். என்னை பரிசோதித்த டாக்டர், 'தம்பி, இதுக்குமேல வளர வாய்ப்பு இல்லை... ஆனா, நிறைய புத்திக் கூர்மை இருக்கு... அவனுக்குப் பிடிச்ச துறையில சேர்த்துவிடுங்க. உயரமா வளராட்டியும் பெரிய ஆளாக வருவான்’னு சொன்னார். உயரம் குறைவாக இருக்கிறதுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்லை. அப்பாவும் அம்மாவும்தான் வருத்தப்படுவாங்க. நான் போன வருஷம்தான் 10-வது படிச்சு முடிச்சேன்.

எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சாயந்திரம் வீட்டுக்கு வந்துட்டா, என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் ஆடுவேன். ஆனா, என்னைவிட பேட் உயரம்கிறதால சொந்தமாக ஒரு சின்ன பேட் செஞ்சுக்கிட்டேன். பந்து எல்லோருக்கும் ஒண்ணுதான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எங்க பக்கத்து வீட்டு தாத்தா பறை அடிக்கக் கத்துக் கொடுத்தார். அதில் இருந்து எனக்கு பறை அடிக்கிற ஆர்வம் அதிகமாகிடுச்சு. வீட்டில் இருக்கும் சாப்பாட்டுத் தட்டையே பறை மாதிரி வெச்சு அடிச்சுட்டு இருப்பேன். 'எனக்கு இசை கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கு' னு சொல்லி அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வந்து சேலம் கலெக்டரைப் பார்த்தேன். அவரும் 'எங்கே பறை அடிச்சுக் காட்டு’ன்னார். சூப்பரா அடிச்சிக் காட்டினேன். அவர் என்னை சேலம் அரசு இசைப் பள்ளியில் சேர்த்துவிட்டாரு. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையும் கொடுப்பதாகச் சொல்லி இருக்காங்க.

இப்போ மிருதங்கம் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கும் வயசு ஆகுது. பொறுப்புகள் அதிகம் இருக்கு. என் தங்கச்சி பத்தாவது படிக்கிறா. அவ நல்லா படிப்பா. அவளை நிறைய படிக்கவெக்கணும். அப்பா, அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கணும். அதுக்கு நான் சம்பாதிச்சாதான் முடியும். அதனால்தான் இந்த மிருதங்கம், தபேலா கத்துக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்தில் மிருதங்க வித்வானாக கச்சேரியில் என்னைப் பார்க்கலாம்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்!



இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரராமன், ''என்றும் 16 வயது மார்கண்டேயன் மாதிரிதான் பெரியசாமி. எங்க பள்ளிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் ஐந்து தாளங்களுக்கு மேல் கற்றுக்கொண்டான். அதிகமான ஆர்வம் இருக்கிறது. ஆறு மாதத்தில் தாளம், ராகம், சங்கீதம் என்று அசத்தப்போகிறார். சொல்லப்போனா பெரியசாமிதான் எங்க பள்ளியின் ஸ்டார் கலைஞர். இறைவன் இவருக்கு எல்லா வரங்களையும் கொடுப்பார்'' என்றார் மகிழ்ச்சி பொங்க!

பெரியசாமி உயரங்களைத் தொட வாழ்த்துகள்!

''நடுகற்களில் உறைந்து உள்ளது தமிழர் வரலாறு!''


ண்டைய காலம்தொட்டே, போரில் இறந்தவர்களின் நினைவாக 'நடுகற்களை’ நடும் பழக்கம் தமிழர்களிடையே இருக்கிறது. அவற்றின் சாட்சியாகத்தான், இன்றைக்குப் பல கிராமங்களில் 'நடுகல்’ சிறு தெய்வங்களாக மாறி வரலாற்றைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் 'நடுகல்’ தெய்வங்களைப் பற்றி, தன்னுடைய எம்.ஃபில் பட்டத்துக்காக ஆய்வுகள் செய்து உள்ளார், திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை மாணவர் சுதாகர்.
''இலக்கியத்தில் தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் நடுகற்கள் வழிபாடுகளைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளன. நடுகற்களை ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர்கள், சங்ககாலம்தொட்டே, இந்தப் பழக்கம் இருப்பதாகச் சொல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், திருவண்ணாமலை வட்டாரங்களில் மிகப் பழமைவாய்ந்த நடுகற்கள் அதிக அளவில் உள்ளன. ஆநிரை கவர்தல், மீட்டல், பெண்களைக் கவர்தல், மீட்டல் ஆகிய காரணங்களுக்காக நடைபெற்ற போர்களில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு இந்த நடுகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக, திருவண்ணாமலைப் பகுதிகளில் காணப்படும் 'வேடியப்பன்’ நடுகற்கள் சிறு தெய்வமாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த வேடியப்பன், நடுகற்களில் வில் அம்புடன் இருக்கிறார். வேடியப்பனின் வேலை, கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டுவருவதும் மக்களைக் காப்பாற்றுவதும்தான். இந்த நடுகற்களில் எழுத்து வடிவங்கள் தென்படுவதால், வேடியப்பனின் காலம் சோழர் காலமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கொளத்தூர் என்ற கிராமத்தில் 'சிலைக்காரன் மற்றும் தாத்தா- பாட்டி’ நடுகற்கள் இருக்கின்றன. இவற்றில் சிலைக்காரனின் கையில் கேடயம் இருக்கிறது. இவனும் வேடியப்பனைப்போல வாழ்ந்து இருக்கலாம். வாய்வழிக் கதையாக நாம் அறிவது, இந்தச் சிலைக்காரன் என்பவன், அந்தக் கிராமத்தில் இருந்த வீரம் பொருந்திய மாவீரன்; கிராமத்துக்குச் சொந்தமான ஏரி உடைந்ததால், அந்தப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற பலி கொடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
வேட்டவலம் அய்யனார் கோயிலில் 'சதிகல்’ ஒன்று உள்ளது. வீரமரணம் அடைந்த கணவன் இறந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உடன்கட்டை ஏறிய மனைவிக்காக வைக்கப்பட்ட நடுகல் அது. இதனை மக்கள் 'பச்சை அம்மன்’ என்றுதான் வழிபடுகின்றனர். பொலக்குணம் என்ற கிராமத்தில் முனியப்பனுக்கு 'நடுகல்’ உள்ளது. தமிழ்நாட்டிலேயே முனியப்பனுக்கு உருவத்துடன் இருக்கும் நடுகல் இதுவாகத்தான் இருக்கும். நடுகற்களை முழுமையாக ஆராய்ந்தால் மறைந்துகிடக்கும் தமிழரின் தொன்மையான வரலாறுகளை மீட்டெடுக்க முடியும். மக்களின் கலாசாரத்தையும், சடங்குகளையும், வாழ்வியல் முறைகளையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்'' என்கிறார் உறுதியான குரலில் சுதாகர்!
- காசி.வேம்பையன்

நாகேஷ் MEAN சிரிப்பு....

 
 
இன்று - செப்.27: நாகேஷ் பிறந்தநாள். இதையொட்டிய பகிர்வு...

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச்

சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!
 
Thanks vikatan
...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில்

தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!


மனதை அடக்க...


 தியானத்தில் அமர்ந்தாலும் மனதை அடக்க முடியவில்லையே என்று சிலர் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் அதில் சிரத்தையுடன் மனத்தைச் செலுத்தவில்லை என்பதுதான் பொருள். ஒருவனுக்கு சில நூறு ரூபாய்களைக் கட்டாகக் கொடுத்து அதை எண்ணிச் சொல்லும்படி வேலை கொடுங்கள். எந்தளவு கவனம் சிதறாமல் எண்ணுவான் என்பது சந்தேகம்தான். அதையே, 'இந்தப் பணம் உனக்குதான்’ என்று கொடுத்து எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். அவன் அந்தக் கட்டில் எவ்வளவு நோட்டுகள் இருக்கிறது என்பதை நிச்சயம் தவறு வராமல், அப்படி இப்படி திரும்பாமல் எண்ணுவான். அவன் வேலையை முடித்ததும் ''எண்ணும்போது மனம் பல திசைகளிலும் அலைந்ததா?'' என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக ''இல்லை!'' என்றே கூறுவான். 'அந்தப் பணத்தின் பலனை அடையப் போகிறோம்’ என்கிற அக்கறை அவனுக்கு இருக்கிறது. அதனாலேயே அவன் மனத்தை அலைய விடவில்லை. தியானத்தின் பலனை முழுமையாக அடைய வேண்டும் என்ற அக்கறை நமக்கு இருக்குமானால் நிச்சய மாக மனத்தை அலைய விடாமல் ஈடுபடுத்த முடியும்.

_ அருள்மிகு அபிநவ வித்தியா தீர்த்த சுவாமிகள்
தகவல்: தேனி முருகேசன்.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
...
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது..
கவிஞரைப் பாராட்டுவோம்..
See More

குழந்தைகள் ஜாக்கிரதை!


ர்வதேச அளவில் போதிய சத்துணவு இன்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்கு உட்பட்ட 19,000 குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள். உலகிலேயே இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம். இது 2012-ம் ஆண்டுக்கான யுனிஃசெப் நிறுவனம் அளித்து உள்ள அதிர்ச்சி அறிக்கை.
2011-ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும் சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில், சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகளும், காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும், சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகளும் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் உணவு கிடைக்காமல் போதிய சத்து இல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் ஆறு குழந்தைகள் உயிர் இழக்கின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும் காரணமான ஊட்டச் சத்துக் குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?
சென்னையில் குழந்தைகள் நலன்குறித்து தொடர்ந்து இயங்கிவரும் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் ஆதங்கத்தோடு சில ஆலோசனைகளைச் சொன்னார். ''ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், குடும்பத்தில் பெண்களுக்கும் அவர்கள் கல்விக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை முக்கியமானதாகக் கூறலாம். இந்தப் பிரச்னையை ஒரே கோணத்தில் பார்க்காமல் பல்வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஐ.நா. சபையின் யுனிசெஃப் கொடுக்கும் அறிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. அரசின் அறிக்கையே இப்படி இருக்கிறது என்றால், வேறு ஒரு சுதந்திரமான அமைப்போ, அல்லது நிறுவனமோ ஆய்வு செய்தால் இன்னும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியேவரும். கல்வி உரிமைச் சட்டம் ஆறு வயது முதல் 14 வயதுவரை உள்ளவர்களைக் குழந்தைகள் எனச் சொல்கிறது. குழந்தைகள் கல்வி கற்கும் வயதை ஏன் ஆறில் இருந்து தொடங்கவேண்டும்? மூன்றரை வயதில் இருந்தே குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால், பிறந்ததில் இருந்து ஐந்து வயதுவரை குழந்தைகள் நலனில் அரசு கவனம் செலுத்துவது இல்லை. இலவச மருத்துவ வசதி இருந்தால் அதிகக் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறந்துபோகும் துர்பாக்கியம் நிகழாமல் இருக்கும். அங்கன்வாடி மையங்களில்தான் ஆறு வயதுவரை உள்ள குழந்தைகள் நாள் முழுக்க இருக்கிறார்கள். ஆனால், அந்த மையம் இயங்கும் விதம், சத்துணவின் தரம் குறித்துக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால் நிறைய ஓட்டைகள் ஏற்படுகின்றன. பொருளாதார மேதை அமர்த்தியாசென், மூன்றாம் உலக நாடுகள் தங்களை வளர்ச்சி அடைந்த நாடுகளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற அவசரத்தில் இழைக்கும் பெரிய தவறு, ராணுவ தளவாடங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதுதான். அதில் ஒரு சதவிகித நிதியைக் குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கினாலே ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கலாம். இனிமேலாவது குழந்தைகளுக்கு என்று பட்ஜெட் தாக்கலில், நிதி ஒதுக்க வேண்டும். சுகாதார வசதிசெய்து கொடுப்பவர்கள், குடிநீர் வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோருமே தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் குழந்தைகள் நலன் மீதான அக்கறையுடனும் பொறுப்பு உணர்வுடனும் நடந்துகொண்டாலே ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்'' என்றார்.
''இப்படி ஒரு செய்தி என்பது, வேறு எதைக்காட்டிலும் இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவுதான். ஆள்பவர்களும் ஆளுகைக்கு உட்பட்டவர்களும் தங்களின் ஆதாரமான கருத்தைச் செலுத்தவேண்டிய கட்டாய நிலை இது. தேசத்தின் எதிர்காலம் குறித்து மிகப் பதறவைக்கும் கருத்து. கற்பனைக்கும் சாத்தியமற்ற இது, ஒரு பெரிய ஆய்வின் உண்மை என்றால், வெட்கத்திலும் அவமானத்திலும் தலை தாழ்ந்து மனம் ஓய்கிறது. இதுதான் நம் மூலாதாரமோ? யாரைக்குறித்தும் அடிப்படையில் மிக முக்கியமாகக் கவனம் செலுத்தி நாம், நம் திட்டங்களையும் நடைமுறைகளயும் வரையறுத்துக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்று மற்றவர்களால் உணர்த்தப்படுவது எவ்வளவு பெரிய வலி? லட்சம் கோடி ஊழல்கள்... ஆயிரம் கோடி திட்டங்கள்... பற்பல நிதிகள்... ஒதுக்கீடுகள்... வாக்குறுதிகள்... சூளுரைகள்... பேரதிகாரப் பீடங்கள்... படோபங்கள்... அளவற்ற விரயங்களுக்கு மத்தியில் பரிதாபமான நிராதரவுப் பார்வையுடன் பலவீனக் குழந்தைகள்... இதுதான் இன்றைய சாபம். உடல் ஊட்டம் இன்றி அறிவூட்டம் இல்லை. அறிவூட்டம் இன்றி நல்ல தலைமுறை கிடைக்கும் சாத்தியம் இல்லை. எப்போதும் குழந்தைகள் இங்கே இரண்டாம், மூன்றாம் பட்சமானவர்களாகவே கருதப்படுகிறார்கள். உணவு என்றாலும், உயரிய கலை, இலக்கியம் என்றாலும் மிஞ்சியதைப் போட்டால்போதும் என்ற பைசாச மனநிலையே காரணம்'' எனக் கொந்தளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் யூமாவாசுகி.
'' இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். வறுமையில் உள்ளவர்கள் மேலும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவதுதான் 59 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல், உடல்வளர்ச்சிக் குன்றிப்போய் நோஞ்சான் குழந்தைகளாக இருப்பதற்கான முக்கியக் காரணம். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் பசியில் வாடும் மக்களுக்குக் கிடைக்காமல் மக்கிப்போகியும் எலிகளுக்குத் தீனியாகவும் வீணாகின்றன. இப்படி வீணாகும் தானியங்களை வறுமையில்வாடும் மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி கேட்டபோது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபப்பட்டார். மக்கி வீணாகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்குத் தரப்படாமல், அவர்கள் பசியால் செத்துக்கொண்டு இருப்பதை வேடிக்கைபார்ப்பது எவ்வளவு பெரியக் கொடூரம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாகக் கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அந்த வயதில் இருக்கவேண்டிய உடல் வளர்ச்சி இல்லாமல், நோஞ்சான் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு அந்த ஐந்து வயதுக்குள் கிடைக்கவேண்டிய மூளை வளர்ச்சி என்பது கிடைக்காமல் போய்விடும். நாளடைவில் மந்தமாகப் போய்விடுவார்கள். இதனால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். நாட்டைப்பற்றிய சிந்தனையோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ வளராமல் போகும். எது நடந்தாலும் கேள்விகேட்காமல், ஆடு மாடுகளைப்போல் வளர்ந்துவிடுவார்கள். அடிமைகளைப்போல் குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். இப்படியே போனால், எதிர்காலத்தில் இந்தியா ஒரு பலவீனமான நாடாகிவிடும்'' என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இராக் நாட்டை சீரழித்த அமெரிக்கா, 20 ஆண்டுகளுக்கு முன்பே இராக் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்ததால், உயிர் காக்கும் மருந்துகள்கூட அந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல்போனது. அதனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் மருந்துகள் கிடைக்காமல், கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்கள். 20 ஆண்டுகள் கழித்து இளைஞர்களே இல்லாத நாடாக இராக் மாறிவிட்டது. இந்த நிலைமைதான் இப்போது இந்தியாவுக்கும். இப்படியே நீடித்தால் இந்தியாவைக் காப்பாற்ற இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மற்ற நாடுகளிடம் சிக்கிப் பெரும் சேதத்தையும் மீண்டுவர முடியாத மோசமான வீழ்ச்சியையும் சந்திக்கவேண்டி இருக்கும். தமிழ் மக்களே... நாமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

Wednesday, September 26, 2012

அஜித் great..

ஓர் உண்மை சம்பவம்:

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக
உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர்.
அவர் விஜகாந்த் நடித்த
...
கண்ணுபடப்போகுதய்யா படத்தில்
பணியாற்றியவர்.
உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த
உதவி இயக்குனர் மருத்துவ... செல...வுக்கு தேவையான
இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம்
இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே..
முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால்
முடிந்ததை கொடுங்கள்
என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.

மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய்
கேட்டாராம் அதைக்கூட தராமல்
துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.

படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.

பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில்துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.

கோபமான
அஜித் மொத்தம்
தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள்
என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம்
தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.

நாட்டை ஆள்வதற்கு துடிக்கும்
விஜயகாந்தின்
மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல்
செய்ய நினைக்கும்
அஜித்தின் மனதிற்கும்
உள்ள
வித்தியாசத்தை நினைத்து.......

Thanks : Ajithism->we are Ajithists :)
See More
— with Ajin Lawarence and 8 others.

Tuesday, September 25, 2012

Published with Blogger-droid v2.0.9

எனது இந்தியா! 3





சுதேசி மன்னர்கள்! 
சுதந்திரம் அடைந்தபோது இந்தியா மூன்று பகுதி​களாக இருந்தது. ஒன்று, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள். அதாவது சென்னை, பம்பாய், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், பீகார், வங்காளம், சிந்து அஸ்ஸாம் பகுதிகளை உள்ளடக்கியது. இரண்டாவது, தலைமைக் கமிஷனர் மாகாணங்கள். இவை, பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பலுசிஸ்தானம், வட மேற்கு எல்லை மாகாணம். மூன்றாவது, 500-க்கும் மேற்பட்ட சுதேசி மன்னர்கள் ஆட்சி செய்த மன்னர் மாநிலங்கள்.
இந்த மூன்று பகுதிகளின் பிரதிநிதிகளைக்கொண்டே அரசியல் அமைப்புச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. நேருவின் தலைமையில் செயல்பட்ட இடைக்கால அரசாங்கம், மன்னர் மாநிலங்களை இந்தியாவோடு இணைக்க ஒரு தனி அமைச்சரகத்தை உருவாக்கி இருந்தது. அதற்கு வல்லபாய் படேல் பொறுப்பேற்று இருந்தார். மன்னர் மாநிலங்களை சுதந்திர இந்தியா​வோடு இணைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அன்று இருந்த மன்னர்கள் காலம்காலமாக அனுபவித்த சலுகைகள் மற்றும் ராஜ வாழ்க்கையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதற்காக, 1947-ம் ஆண்டு ஜுலை 25-ம் தேதி இந்திய மன்னர்களின் மாநாடு ஒன்றை நடத்தினார் மௌன்ட் பேட்டன்.  இதில், மன்னர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அனைத்துச் சலுகைகளையும் பிரிட்டிஷ் அரசு முறையாகப் பெற்றுத்தரும் என்றும் அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டது. சுதேசி மன்னர்கள், படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மன்னர்களின் இணக்கத்தைப் பெறுவது எளிதாக இல்லை. படேல் சாம, தான பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளைப் பயன்படுத்தியே மன்னர்களின் இசைவைப் பெற்றார். இதற்கு, உள்துறைச் செயலராக இருந்த வி.பி.மேனன் முக்கியத் துணையாக இருந்தார்.

அந்தக் காலத்தில், சுதேச சமஸ்தானங்களில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவது தண்டனைக்​குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் சுதேசி சமஸ்தானங்கள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. பி.சி.ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டு சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். 550 மன்னர்கள் தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்காக அதற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டனர். ஆனால், ஜுனாகத் நவாப், ஹைதராபாத் நிஜாம், மற்றும் காஷ்மீர் மன்னர் ஆகியோர் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்கள் இந்தியாவோடு இணைந்த நிகழ்வு எதிர்பாராத பல திருப்பங்களைக்கொண்டது.
சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.
சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார். சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள். கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.
அதோடு, 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார். காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான் காலையில் கண் விழிப்பது வழக்கம். அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர். பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).
இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும். ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார். அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன. டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம்.
ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.  இந்தியாவில் இருந்த சுதேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள். இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான். 
இவருக்கு நாய்கள் என்றால் உயிர். அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார். ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.  நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை. அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.
அவரது செல்ல மகள் என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது. மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.
திருமணத்தின் தலைமை விருந்தினர் கர்சன் பிரபு. அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று அறிந்த கர்சன், நிகழ்ச்சிக்கு வரவில்லை. அது, தன்னை அவமதிக்கும் செயல் என்று நவாப் பகிரங்கமாக அறிவித்தார். திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.

திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள் அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.
மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது.  

மிஸ்டு கால்

ரு நம்பர்மாற்றி அழுத்தியதால், வேறு எண்ணுக்குத் தவறுதலாக டாப்-அப் செய்துவிட்டேன். அந்த நம்பருக்கு போன் போட்டு, 'சார், தெரியாம நம்பர் மாத்திப் பண்ணிட்டேன். கொஞ்சம் எனக்கு டாப்-அப் பண்ணிவிட்டுர்றீங்களா?’ என்று கேட்டதும், அது வரை தமிழில் பேசியவன், 'கியாஜி... ஆவோஜி...’ என்று வாயில் வாழைக்காய் பஜ்ஜி போட ஆரம்பித்தான்.
 செல்போன்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து போவதைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், உலகின் பல நாடுகளில் தேனீக்கள் மிக வேகமாக அழிந்துவருகின்றன. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தேனீக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 சதவிகிதம் தேனீக்களைக் காணவில்லை.
பொதுவாக, தேனீக்கள் தேன்கூட்டில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை பறந்து சென்று, பூக்களில் தேனைச் சேகரித்துக் கூடு திரும்பும். லட்சக்கணக்கில் தேனீக்கள் பறந்தாலும் அந்தந்தத் தேனீ, அதனதன் கூட்டுக்குத் திரும்பக் காரணம், பூமியின் மின் காந்த அலைகள்தான். அந்த அலைகளை உணர்வதன் வழியாகத்தான் ஒரு தேனீ, சரியாகக் கூட்டை அடைகிறது. ஆனால், செல்போன் கோபுரங்களின் அலைவீச்சு இந்த மின் காந்த அலைகளைச் சிதறடிக்கிறது. இதனால் தேனீக்களால் சென்ற வழியில் கூடு திரும்ப முடியவில்லை. கூட்டம் கூட்டமாகச் செத்து மடிகின்றன. இதற்கு 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்’ (Colony collapse disorder) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
'அட... தம்தூண்டு தேனீதானே’ என்று நினைக்க வேண்டாம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகின்றன. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் தேனீக்கள் மூலமே நிகழ்கிறது. 'தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை, தாவரங்கள் இல்லை, உணவு இல்லை, பிறகு மனித குலமே இல்லை’ என்று சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ''தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்'' என்றும் எச்சரித்துச் சென்றிருக்கிறார் அவர். என்ன செய்யப்போகிறோம்? குறைந்தபட்சம், இதைப் பற்றி செல்போன் உரையாடல்களில் விவாதிக்காமலேனும் இருப்போமே!
சுத்தமே செய்யப்படாமல் ஒரு பொருளை வருடக்கணக்கில் பயன்படுத்துகிறோம் என்றால், அது செல்போனாகத்தான் இருக்கும். நாள் ஒன்றுக்குப் பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துகிறோம். வாய்க்கு அருகில் வைத்துப் பேசிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு அழுக்காக இருந்தாலும் செல்போனை உபயோகிக்கத் தயங்குவது இல்லை. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் நம் சுற்றுப்புறச் சூழலில் வசிக்கும் கிருமிகள்குறித்து ஆய்வு நடத்தினார். முடிவாக அவர் கண்டறிந்த உண்மை... நம் கழிப்பறைகளைவிட செல்போன்களில்தான் அதிகக் கிருமிகள் இருக்கின்றன!
''கிளம்பிட்டேன் நண்பா... கோயம்பேட்ல இருக்கேன். பஸ்ல ஜன்னல் சீட்!'' என்று அண்ணா சாலையில் நின்றபடி முருகன் யாரிடமோ போனில் சொல்லும்போது, மணி மாலை 5. நானும்தான் அருகில் இருந்தேன். வேலை முடிந்ததும் நான்தான் பாண்டிச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டேன். அப்போது மணி இரவு 9. அடுத்த நாள் மாலை அவன் சென்னைக்குத் திரும்புவதாகத் திட்டம். மறுநாள் மாலை 6 மணிக்கு போன் போட்டு, ''கிளம்பிட்டியா?'' என்றால், ''கிளம்பிட்டேன் மச்சான்'' என்கிறான். ''உண்மையாக் கிளம்பிட்டியா?'' என்றதற்கு சத்தியம் எல்லாம் செய்தவன், வந்து சேர்ந்தபோது இரண்டு நாட்கள் கடந்திருந்தன.
                                                                                                                                                                    பாரதி தம்பி

'இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிச் சிருந்தா, உடனே இரண்டை அமுக்குங்க’னு சொன்னது அந்த போன் குரல். எனக்கும் அந்த பாட்டைப் பிடிச்சுத்தான் இருந்துச்சு. ரெண்டை அமுக்கினேன். உடனே குறுந்தகவல் வந்துச்சு... 'உங்க பேலன்ஸ்ல இருந்து ரூபாய் முப்பது பிடிச்சிருக்கோம்’னு!
  - செ.சரவணக்குமார், சாத்தூர்.
முன்பெல்லாம் 'காலணிகளை வெளியே விடவும்’ என்று சில இடங்களில் எழுதியிருப்பார்கள். அத்துடன் சேர்த்து இப்போது, 'உங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்யவும்’ என்றும் எழுதி இருக்கிறார்கள்!
- எம்.ஆர்.சத்தியா, ராமநாதபுரம்.
[ To

Friday, September 7, 2012

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.  

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !

மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.

பிரபாகரன் இல்லை !


"பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.