தியானத்தில் அமர்ந்தாலும் மனதை அடக்க முடியவில்லையே என்று சிலர் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் அதில் சிரத்தையுடன் மனத்தைச் செலுத்தவில்லை என்பதுதான் பொருள். ஒருவனுக்கு சில நூறு ரூபாய்களைக் கட்டாகக் கொடுத்து அதை எண்ணிச் சொல்லும்படி வேலை கொடுங்கள். எந்தளவு கவனம் சிதறாமல் எண்ணுவான் என்பது சந்தேகம்தான். அதையே, 'இந்தப் பணம் உனக்குதான்’ என்று கொடுத்து எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். அவன் அந்தக் கட்டில் எவ்வளவு நோட்டுகள் இருக்கிறது என்பதை நிச்சயம் தவறு வராமல், அப்படி இப்படி திரும்பாமல் எண்ணுவான். அவன் வேலையை முடித்ததும் ''எண்ணும்போது மனம் பல திசைகளிலும் அலைந்ததா?'' என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக ''இல்லை!'' என்றே கூறுவான். 'அந்தப் பணத்தின் பலனை அடையப் போகிறோம்’ என்கிற அக்கறை அவனுக்கு இருக்கிறது. அதனாலேயே அவன் மனத்தை அலைய விடவில்லை. தியானத்தின் பலனை முழுமையாக அடைய வேண்டும் என்ற அக்கறை நமக்கு இருக்குமானால் நிச்சய மாக மனத்தை அலைய விடாமல் ஈடுபடுத்த முடியும்.
_ அருள்மிகு அபிநவ வித்தியா தீர்த்த சுவாமிகள்
தகவல்: தேனி முருகேசன்.

No comments:
Post a Comment