Monday, December 31, 2012

2012-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்!



''பல முறை தீவிர முயற்சிகள் எடுத்தும் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறவில்லை.''
 - மன்மோகன் சிங்
''ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால், ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது என்று அர்த்தம். ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால், ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது என்று பொருள்.''
- நீதிபதி சந்துரு
''என்னுடைய மனைவிகள் இருவரும் என்னை, 'ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்... ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்கள். என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை.''
- கருணாநிதி
''மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறிவருகின்றனர். அரசியல்வாதிகளைப்பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது.''
-  நீதிபதி ஜோதிமணி
'’தி.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்வேன்.''
- மு.க.அழகிரி
''ஆண்கள், 'செக்ஸியாக இருக்கிறீர் கள்’ என்று கூறினால், பெண்கள் அதைப் பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. 'அழகாக இருக்கிறீர்கள்’ என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்.''
- மம்தா சர்மா, தேசிய மகளிர் ஆணையத் தலைவி.
''நானும் மற்ற மூன்று விஞ்ஞானி களும் அரசுப் பதவிகள் எதுவும் வகிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்த பின் விளக்கம் கொடுக்க மத்திய அரசு சந்தர்ப்பம் அளிப்பது என்பது, ஒருவரைத் தூக்கிலிட்ட பின் அவரிடம் கருத்துக் கேட்பதுபோல் உள்ளது.''
- மாதவன் நாயர்
''தேவைக்கு அதிகமான தலைவர்கள் இருக்கிறார்கள். அதுதான் எங்களுக்கு உள்ள பிரச்னை.''
- சோனியா காந்தி
''தி.மு.க. முடிந்துபோன கட்சி. அ.தி.மு.க. திரும்ப வராது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. கம்யூனிஸ்ட் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. விஜயகாந்த் தள்ளாடி வருவார்.''
- அன்புமணி
''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்.''
-  ராஜபக்ஷே
''நான் பிரபுதேவாவுக்கு உண்மையாக, விசுவாசமாக இருந்தேன். ஆனால், அவர் இல்லை.''
- நயன்தாரா  
''வெளிநாடுகளில் முடக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்.''
- முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது.''
-  தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி
''அதிகாலையில் நான் தும்மினாலோ, இருமினாலோ உடனே எழுந்து வந்து என்னைப் பார்ப்பார் என் தாய். சில சமயம் நான் சிறு குழந்தைபோல் அழுவேன். அப்போது அவர் என்னைத் தேற்றுவார். என்னைவிட மனவலிமை மிக்கவர் என் தாய்.''
- யுவராஜ்சிங்
''சட்டம்-ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி, ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாகக் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.''
- ஜெயலலிதா
''தமிழகத்துக்கு, ஒரு சொட்டு காவிரி நீர்கூட விடவில்லை. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்துக்குத் தண்ணீர் விடும் திட்டமே இல்லை.''
-  கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா
''மது விற்பனையின் மூலம் மக்களுக்குச் சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது 'டாஸ்மாக்’ நிறுவனம்.''
- நீதிபதி சந்துரு
''சர்வதேச அளவில்கூட, ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குச் செல்லும் நதி நீரைத் தடுக்க உரிமை இல்லை. ஆனால், ஒரே நாட்டில் உள்ள மாநிலங் களுக்குள் நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் இத்தனை பிரச்னைகள்.''
-  வைகோ
''என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள், அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்களை வைக்கத் தயாரா?''
- நித்தியானந்தா
''ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக் கூடாதா?''
- கருணாநிதி
''என்னைப் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்ட மிட்டு உள்ளனர்.''
- ம.நடராசன்
''நமது உலகில் அமைதி என்பது இன்னும் அடைய முடியாத குறிக்கோளாகவே உள்ளது.''
-   ஆங் சாங் சூ கி
''சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக இருந்தாலும், திறமை உள்ள இளைஞர்கள் தொடர்ந்து அமெரிக்கா வில் தங்கலாம்.''
- பாரக் ஒபாமா
''நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சோனியா காந்தியைப் பிரதமர்ஆக்கத் தயாராகவே இருந்தேன்.''
- அப்துல் கலாம்
''முள்ளிவாய்க்காலில் தாக்குதல்நடத்து வதில் ராணுவத்துக்குத் தயக்கம் இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கு இருந்தார்கள். குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்ச மாட்டார்கள். அதிபர் ராஜபக்ஷேதான், 'எந்த சர்வதேச நெருக்கடிக்கும் பயப்படாதீர்கள்; தாக்குதல் நடத்துங்கள்’ என்று உத் வேகம் கொடுத்தார். அதனால்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.''
-  இலங்கை தரைப் படைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா.
''கிரிக்கெட்டில் எனது வருங்காலம்குறித்து நான் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது. அதுகுறித்து நான்தான் முடிவு எடுக்க வேண்டும்.''
- சச்சின் டெண்டுல்கர்
''தமிழக முதல்வர் அண்ணா சாலையில் குப்பை இருந்தால்கூட, அதை அகற்ற பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். 'என்னால் ஆட்சி செய்ய முடியவில்லை’ என்று கடிதம் எழுதுங்களேன்... அதற்கு உடனடியாகப் பதில் கிடைக்கும்.''
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
''கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பங்கு ஆற்றப்போகிறேன். எப்போது என்பதை எனது 'பாஸ்’களான காங் கிரஸ் தலைவரும் பிரதமரும் முடிவு செய்வார்கள்.''
- ராகுல் காந்தி
''என்னைப் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக முதல்வரும் மதிக்கவில்லை; அமைச்சர்களும் மதிக்கவில்லை.''
- விஜயகாந்த்
''சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மூலம், அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.''
- சகாயம் ஐ.ஏ.எஸ்.
''எத்தனை காலத்துக்கு, எத்தனை தடவை நாங்கள் உண்ணாவிரதம் இருப்பது?’
- அண்ணா ஹஜாரே
''போர் நடைபெற்ற நேரத்தில் நான் எதுவுமே செய்யவில்லை என்று என் மீது புகார்க் காண்டம் படிக்கும் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன்... 'நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இலங்கைத் தமிழர் களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே?’ ''
- கருணாநிதி
''ராகுல் காந்தி சர்வதேசத் தலைவர். இந்தியாவில் மட்டும் அல்ல; இத்தாலியில்கூட அவர் பிரதமர் ஆகலாம்.'' 
- நரேந்திர மோடி
''குடும்பத்துக்காக ஆட்சி நடத்திய கருணாநிதி அரசின் மின்வெட்டை மிஞ்சிவிட்டது... 'தமிழகம்தான் என் குடும்பம்’ என்று சொல்லி ஆட்சி நடத்தும் ஜெயலலிதா அரசின் மின்வெட்டு.''
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
''கழிப்பறை இல்லாத வீட்டுக்கு எந்தப் பெண்ணும் மணமகளாகச் செல்லக் கூடாது.''
- மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
''ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அமைக்கும் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டேன் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.''
- வி.எஸ்.அச்சுதானந்தன்
''மீண்டும் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்காமல் ஓய மாட்டேன்.''
        - ஜெயலலிதா
''நான் டெங்குக் கொசுவைவிட ஆபத்தானவன். கடித்தால் தாங்க மாட்டீர்கள்.''
  - அரவிந்த் கெஜ்ரிவால்
''இளைஞர் அணி அமைப்பாளர் ஒருவரிடம் தலைவர், 'வயது என்ன?’ என்று கேட்க... அவர் '56’ என்று சொல்ல, தலைவர் என்னைப் பார்க்க, நான் இளைஞர் அணி தோழரைப் பார்க்க, இப்படிப்பட்ட சூழலில்தான் தலைவர் 'இளைஞர் அணிக்கு ஒரு வயது வரம்பு வைத்தால் என்ன?’ என்று கேட்டார்.''
- மு.க.ஸ்டாலின்
''எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும்.''
- மதுரை மத்திய சிறைக் கைதிகள்
''நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியது உண்டு. திரையுலகுக்கு வந்த பின் அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினைதான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான்... தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்.''
- ரஜினிகாந்த்
''நான் டாக்டருக்குப் படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பா.ம.க. தொடங் கிய பின்பு வரை நான் சாதிவெறியன் தான். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால், உன் பெண்ணைக் கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள்.'
- ராமதாஸ்

No comments:

Post a Comment