Saturday, June 5, 2021

ஆட்டுக்கறி

 

ஆட்டுக்கறி வாங்கும் போது நல்லது எதுன்னு பார்த்து வாங்குவது எப்படி    தெரியுமா?

அது நல்லதா, கெட்டதா என்பது வாங்கி வீட்டில் கொண்டு வந்த பிறகு தான், இது நல்லதல்ல என்று நமக்கு தெரியும். மட்டன் வாங்கும் போது, இறைச்சியில் நல்லது எது, கெட்டது என்பதை அறிய இந்த பதிவை படித்து பாருங்கள்.

ஆரோக்கியமான ஆடு

நல்ல ஆரோக்கியமான ஆடு என்பதை அறிய, ஆடு வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில், வடிகின்ற இரத்தத்தை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

எப்படியெனில், நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும் போது, உடலில் உள்ள இரத்தம் எங்கும் தங்காமல் முழுவதும் வடிந்து விடும். ஒரு இடமும் தேங்கியிருக்காது.

இதுவே ஆடு இறந்து போனபின் வெட்டிய இறைச்சியாக இருந்தால் அதன் இரத்தம் வடிந்து போகாமல் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். இதை வைத்தே அந்த ஆடு ஆரோக்கியமற்ற ஆடு என்பதை கண்டறியலாம்.

ருசியான ஆடு

ஒரு பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அந்த இரண்டு ஆட்டில் நிச்சயமாக பெட்டை ஆட்டின் இறைச்சி தான் கறிக்கு ருசியாக இருக்கும். அதனால் பெட்டை ஆட்டு கறியை தேர்ந்தெடுங்கள். கோழியில் பார்த்தாலும் அதே போல தான்.

நெஞ்சுப் பகுதி

ஆட்டின் நெஞ்சு பகுதி மற்றும் நெஞ்சுக்கு பின்புறம் உள்ள முதுகுத் தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். இதை பார்த்து வாங்குங்கள்.

தொடைக்கறி

பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் தொடைப்பகுதியில் சதை அதிகமாக இருக்கும். நாமும் இறைச்சி வாங்கும் பொழுது அந்த தொடைப் பகுதியை தான் கேட்டு வாங்குவோம்.

ஆனால் தொடைப்பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், அப்பகுதியில் உள்ள இறைச்சி சாப்பிட சற்று கடினமாக இருக்கும். குறிப்பாக ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.

இவற்றை கவனித்து ஆட்டுக்கறி வாங்கினால் நாம் வாங்குகின்ற ஆட்டுக்கறி நல்ல ருசியாக, சாப்பிட இதமாக இருக்கும்.

வெள்ளாட்டு இறைச்சி

வெள்ளாட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு உள்ளன. இதன் இறைச்சி மென்மையாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். வெள்ளாட்டு இறைச்சியில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. அதை பற்றி இப்போது பாப்போம்.

ஆட்டின் தலை

ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து விடும். பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். கபால பிணிகளை போக்க உதவுகிறது.

ஆட்டின் கழுத்துகறி

ஆட்டின் கழுத்துக்கறி மிகவும் மென்மையாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். இது குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சாப்பிடுவதற்கு சிறந்தது. முக்கியமாக இதில் அதிகமாக கொழுப்பு இருக்காது.

ஆட்டின் கண்

ஆட்டின் கண் நம் கண்களுக்கு அதிக பலத்தை கொடுக்கிறது. பார்வை அதிகரிக்க உதவுகிறது.

ஆட்டின் நெஞ்சு பகுதி

கபத்தை போக்குகிறது, நமது மார்பு பலத்தை கொடுக்கிறது. உடலில் புண் இருந்தால் குணமாக்குகிறது.

ஆட்டின் இதயம்

நமது மன ஆற்றலை பெருக்க உதவுகிறது. இதயத்திற்கு பலத்தை தருகிறது.

ஆட்டின் நாக்கு

ஆட்டின் நாக்கு நமது உடல் சூட்டை தணிக்கிறது. நமது சருமத்தை பளபளப்பாக்குகிறது.

ஆட்டு மூளை

ஆட்டு மூளை சாப்பிட்டால் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. தாது விருத்தியை உண்டாக்கும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யும், புத்தி கூர்மை பெறும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தை தருகிறது.

ஆட்டு நுரையீரல்

ஆட்டு நுரையீரல் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது. இது நமது நுரையீரலுக்கு மிகுந்த வலுவை தரும். மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருக்கிறவர்களுக்கு இது மிகசிறந்த மருந்தாக அமையும்.

ஆட்டு கொழுப்பு

ஆட்டு கொழுப்பு சாப்பிட்டால் நம் இடுப்பு பாகத்திற்கு நல்ல பலன் தரும். மட்டுமல்லாது எவ்வித புண்களையும் குணமாக்கும். மேலும் அம்மை மற்றும் அக்கி போன்ற நோய்களுக்கு இது மருந்தாகிறது.

ஆட்டு கால்கள்

ஆட்டுக்கால்கள் நம் எலும்புக்கு பலம் தருகிறது. கால்களுக்கு நல்ல ஆற்றல் தருகிறது.

ஆட்டுக்குடல்

நமது வயிற்று பகுதியில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி ஆட்டுக்குடலுக்கு உள்ளது. அல்சர் இருப்பவர்களுக்கு ஆட்டுக் குடலை விட சிறந்த மருந்து எதுவும் கிடையாது.

ஆகவே ஆட்டுக்கறி வாங்கி சாப்பிட்டு உங்கள் உடலை நோயில்லாமல் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment