Wednesday, January 28, 2015

ஹலால் (Halal) என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) – நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்
ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B.
மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?
அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !
கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Natural Ways To Lighten Dark Lips

Dark lips are caused by drinking caffeine daily,smoking,direct sunlight(u.v rays).being in polluted areas long time..whatever the causes are I have some risk free natural ways to overcome the dark lips.
Natural ways to lighten dark lips:
Sugar scrub: Sugar scrub is very beneficial in the treatment of dark lips.Take 3-4 table spoons of sugar powder and add butter to it.mix it to form a thick paste and apply it on lips.Sugar works as a exfoliate and remove dead cells on the lips.Butter helps to increase the moisture and color.

Beetroot: Natural agents present in the beetroot helps to remove the dead cells and gradually reduce the darkness.

Olive oil: Olive oil has so many essential nutrients that will helps to reduce the darkness of lips.Retain few drops of olive oil and scrub it.

Rose petals: Prepare paste from rose petals by adding butter to it.Apply the mixture on lips rose petals helps to lighten the dark lips try to make it twice in a week for better noticeable results.

Berries: Berries are very helpful to lighten the dark lips.Prepare the paste from raspberries or strawberries and mix it up with aloevera gel and honey.Apply the mixture on lips and scrub it.Wash it off thoroughly after 10 minutes.

Petroleum jelly: Take two tablespoons of petroleum jelly and add 1/2 tablespoon of strawaberry paste mix it well.Use it as a daily lip balm.

Pomegranate: Separate the pomegranate seeds and add butter.Blend it properly to make a paste.Apply this mixture over the lips and scrub it.This is one of the best natural home made remedy to get clear pink lips.

Salt: Mix pinch of table salt in tablespoon of milk and apply this mixture over the lips and scrub it gently.Wash it off after 10-15 minutes.

Aloevera: Aloevera gel is one of the best natural way to restore the original color of lips.Apply aloevera gel over the lips and scrub it.

Banana: Prepare a paste with banana and milk cream along with this add honey.Apply this mixture daily for a noticeable results.

நீர் எனும் அற்புதம்!

இயற்கையின் பரிசு
‘நீரின் அருமை தெரியும் கோடையிலே’ என்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கிறது.
நீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்... தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும்... எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்... கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தரும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா? இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.
தண்ணீரே பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகும். எப்படி?
தண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும் தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது. கேடு விளைவிக்கும் பாக்டீரியா சிறுநீர்ப்பையில் இருந்தாலும்கூட நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிரச்னை வராது... தண்ணீர் அதனை துவம்சம் பண்ணி வெளியேற்றி விடும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தி பெற உதவும்.காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின்
உடலில் அதிக சூடு இருக்கும்.
நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது. கெட்டியான சளியை கூட தண்ணீர் இலகுவாக்கி வெளியேற்றிவிடும். நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். உணவு சாப்பிட்ட பின் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. தண்ணீர், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதன் பிறகு எவ்வளவு சாப்பிட்டாலும் கொழுப்பு உடலில் தங்காமல் செய்து விடும். தண்ணீர் தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள்.
தண்ணீர் குடிக்க சரியான வழிகள்
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?
தூக்கத்தின் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடும். தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.
தினமும் 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஏன்?
55 கிலோ எடையுள்ளவருக்கு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் தேவை. 86 கிலோ எடையுள்ளவருக்கு 12 கிளாஸ் தண்ணீர் அவசியம். அவ்வப்போது சிறுநீரின் நிறத்தையும் கவனிக்க வேண்டும். வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் என்கிறது அமெரிக்க நலவாழ்வியல் அமைப்பான மாயோ கிளினிக். தினம் 16 கிளாஸ்களுக்கு அதிகமாகவும் தண்ணீர் அருந்த வேண்டாம்.
தண்ணீரை ஒரே மூச்சில் மடக் மடக் என்று குடிக்காமல் மிடறு மிடறாகப் பருகுவது நல்லது. ஏன்?
ஒரு சொம்பு தண்ணீரை ஒரேடியாக குடித்தால் இதயம் வெகு வேகமாக வேலை செய்யும். இது நல்லதல்ல. மிடறு மிடறாகப் பருகினால் இதயத்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். உடல் தண்ணீரை மெதுவாக எடுக்கும். இதனால் சோர்வு வெகுவாகக் குறையும்.
தண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஏன்?
தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரில் 2 கிளாஸ் குறைவாகவே குடிப்பீர்கள். முதியோருக்கு சரியாக தாகம் எடுக்காது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது.
தண்ணீருக்கு மாற்றாக வேறு பானங்கள் அருந்தக்கூடாது. ஏன்?
சிலர் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வேறு குளிர்பானங்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்துவார்கள். இதில் அதிக சர்க்கரையும் பாஸ்பரஸுசும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எலும்புகளின் வலுவை குறைக்கும் ஆஸ்டியோபோரசிஸ் பிரச்னை, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைகிறது. மதுபானங்கள் அருந்துபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் சுத்தமாக வெளியேறும். அதனால் சோர்வடையச் செய்கிறது.
குழந்தைகளுக்கு முறையாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன்?
குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலில் போதுமான தண்ணீரை கொடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வரும் சிறுநீரகக் கற்களை தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல்நலமில்லாமல் இருக்கும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?
உடல்நலமில்லாமல் இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்து, உடலில் உள்ள தொற்றுக் கிருமிகளையும் வெளியேற்றி, உடலை நல்ல நிலைக்கு மீட்க தண்ணீர் உதவுகிறது.
கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?
பால் சுரப்பதற்கும் குழந்தைக்குப் பாலூட்டவும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது தினமும் 10 கிளாஸ் தண்ணீரும், பாலூட்டும் போது 13 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும்.
"You know kotaiyile 'nodded. Pirappo essential to all life and serves as a vital water.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட்டின் பயன்கள்

* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும்
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை!


5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேவை:
1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை
1 எலுமிச்சைப்பழம்
1 கப் தண்ணீர்
செய்முறை:
மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.
சாப்பிடும் முறை:
இந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.
மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்த்து கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.
அதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

Tuesday, January 27, 2015

முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !

டியர் டாக்டர்
முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம்... ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்...''
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
''கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட்டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத் துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்
தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை...
வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் 'கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனால் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னிங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு... சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.
மார்பகத்தில் வலி:
 முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கையான தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட்டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.
அடிவயிற்று வலி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை... இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ... வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.
வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட்டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்வது... இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்கு காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும்.

வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவுக்கு உதவும்.
எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்பவதிகளின் எடை மேலும் அதிகமாகும். தாய்ப்பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்:
 கர்ப்பவதிகளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச்சிதைவை தடுப்பற்காக செயல்படும் 'ப்ரோஜெஸ்டிரோன்' (றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ) ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்கவிளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் 'பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச்சிக்கலை 'பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது... நீர் அருந்துவது, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மாத்திரைகள் காரணமெனில்... அவற்றைக் குறைத்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்தத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொள்வது போன்றவற்றால் இதை தவிர்க்கலாம்.
மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பாலானவர்கள் இதை 'சளி’ என்றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.
முதுகுவலி மற்றும் கால்வீக்கம்: இடுப்பு எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகுவலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழாய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.
போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.'’

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க..

சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் பாதையிலும் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது, தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்கிறார் மதுரை மீனாட்சி மிஷன் சிறுநீரியல் மற்றும் ஆண்மையியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளி. அவர் கூறியதாவது: ‘சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.
நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
சிறுநீர் தொற்றும் ஏற்படும். கீழ்புற நீர்ப்பாதையில் தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும், எரிச்சலும், அடிவயிற்று வலி, காய்ச்சல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் கற்கள் நீர்பாதையை அடைக்கும் போது சிறுநீரகத்தில் நீர் வீக்கம் உண்டாகும். அப்போது வயிற்றில் கட்டி இருப்பது போல் உணரலாம். அறிகுறி இல்லாத நாள்பட்ட சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரின்மை உருவாகும்.
சிகிச்சை முறை: சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.
பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பாட்டி வைத்தியம் பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
டயட்
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க சாப்பிட மற்றும் குறைக்க வேண்டிய உணவுகள் பற்றி உணவு ஆலோசகர் ஜெயந்தி கூறியதாவது: பால், பால்பொருட்களை குறைந்தது ஒரு நாளைக்கு 300 மி.லி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தானியங்களில் கம்பு தவிர மற்ற தானியங்கள், பருப்பு வகைகளில் கடலைப்பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, பாசிபருப்பு, உலர்ந்த பட்டாணி சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளை முள்ளங்கி, பாகற்காய், அவரைக்காய், சவ்சவ், கொத்தவரங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மாங்காய், பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அன்னாசிப்பழம், ஆப்பிள், பப்பாளி, பிளம்ஸ், வாழைப்பழம், எலுமிச்சை, தர்பூசணி, பேரிக்காய் போன்ற காய்கறி, கிழங்கு மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். கோழி மற்றும் மீன் கொஞ்சம் சாப்பிடலாம். இரவில் ஒருமுறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்: காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். -

காதலிக்கும்போது கிடைத்த ஆனந்தம், திருமணத்துக்குப் பிறகு ஏன் கிடைக்கவில்லை ...?????

கேள்வி: ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால், அந்தப் பழைய காதல் காற்றில் கரைந்தது போல், காணாமல் போய்விட்டது. அப்படியானால், காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? இச்சை தீர்ந்ததால், காதலும் தீர்ந்து போய்விட்டதா?

சத்குரு: ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உடல் ரீதியான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி. இருவேறுவிதமான உடலமைப்புகள் இருப்பதுதான் அந்த வசீகரத்தின் அடிப்படை.

'உடலளவில் என் இணை என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கவேண்டும். ஆனால், மனதளவில் என்னிலிருந்து எந்தவிதத்திலும் வித்தியாசப்பட்டு இருக்கக்கூடாது' என்பது வரம்பு மீறிய எதிர்பார்ப்பு. அதனால்தான் காதல் என்று நீங்கள் நினைப்பது மூச்சுத் திணறுகிறது.

இன்று, உங்கள் காதலில் லயிப்பு இல்லை; கடமை உணர்வுதான் இருக்கிறது. கவனிக்காவிட்டால், காதல் காணாமல்தான் போகும்!
இருவேறுபட்ட உண்மை நிலைகள்:
திருமணத்திற்கு முன், உங்கள் இணையைச் சந்திக்கச் செல்கையில், அழகாக உடுத்தி, இனிக்கப் பேசினீர்கள். உணவு விடுதியிலோ, தியேட்டரிலோ செலவு செய்த சிலமணி நேரங்களில், இருவரும் தத்தம் குறைகளை மறைத்து, அவரவரைச் சிறப்பாகக் காட்டிக் கொண்டீர்கள். அது ஓர் உண்மை நிலை.

அவரோடு சேர்ந்து வாழ்கையில் அவர் பல்துலக்கும் முறையோ, சமைத்துப் பரிமாறும் விதமோ, படுக்கையில் குறட்டைவிடும் ஒலியோ உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அது இன்னோர் உண்மைநிலை.

'உலகம் அழிந்தாலும், அழியாதது எங்கள் காதல்' என்று அறிவித்தவர்கள் கூட, பிற்பாடு ஏன் பிரியமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள்?

இது காதலின் குற்றமல்ல; இரண்டு மாறுபட்ட உண்மை நிலைகளைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களின் குறைபாடு.
உங்கள் பிரச்சினை என்ன தெரியுமா?

காதல் என்பது திருமணத்துக்கு முதல்படி என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.

ஒருத்தியைக் காதலியாக வைத்துக் கொள்வதற்கு அவளிடம் காட்டிய அதே உணர்வை, மனைவியாக வைத்துக் கொள்வதற்குக் காட்டத் தேவையில்லை என்று முட்டாள்தனமான முடிவு செய்துவிட்டீர்கள்.

இன்று, உங்கள் காதலில் லயிப்பு இல்லை; கடமை உணர்வுதான் இருக்கிறது. கவனிக்காவிட்டால், காதல் காணாமல்தான் போகும்!

கேள்வி: "அப்படியில்லை, சத்குரு! இப்போதும் எங்களுக்குள் பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அவள் மீது எனக்கோ, என் மீது அவளுக்கோ எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், முன்பு காதலிக்கும்போது கிடைத்த ஆனந்தம், திருமணத்துக்குப் பிறகு ஏன் கிடைக்கவில்லை என்கிறேன்?”

காதலின் சுகம் பற்றி அறிய, பழைய வாழ்வின் நினைவுகளைத்தான் அசை போட வேண்டும் என்பது துரதிர்ஷ்டமான மனப்போக்கு.
காதல் பிளக்:
ஒரு மருத்துவமனை. டாக்டர்கள் கூடினர்.

"தீவிர சிகிச்சைப் பிரிவில், தினம் காலை எட்டு மணிக்கு ஒரு நோயாளி இறக்கிறார். ஏன்?”

மருத்துவரீதியாக எந்த விளக்கமும் திருப்தி தரவில்லை. நிபுணர்களுக்கே இந்த விஷயம் சவாலாக இருந்தது.

"அந்த நேரம் பேய், பிசாசு போன்ற ஏதோவொரு அமானுஷ்ய சக்தி உள்ளே வந்து உயிரைப் பறித்துப் போகிறதோ!” என்றார் ஒரு டாக்டர்.

எதுவானாலும், அதைக் கண்டு பிடித்துவிடுவது என்று முடிவானது.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் டாக்டர்கள், தத்தம் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி, அங்கே ஒளிந்திருந்து கவனித்தனர்.

சரியாக எட்டு மணிக்குக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தாள், துப்புரவு செய்யும் பெண்மணி, உயிர்காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப் பிடுங்கினாள். அங்கே வேக்குவம் கிளீனரின் பிளக்கைச் செருகி அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

இப்படித்தான் நீங்களும் காதல் பிளக்கைப் பிடுங்கி விட்டீர்கள்.
காதல் தானாக சாகாது:
கடந்த ஐந்து வருடங்களில் உங்கள் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் எவ்வளவு மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன என்று யோசியுங்கள். உங்கள் இணைக்கும் அதே அனுபவம் இருக்கும்.

பதினெட்டு வயதில் சந்தித்த காதலி நாற்பது வயதிலும் அதே போல நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது, உண்மையை ஏற்க மறுக்கும் முட்டாள்தனமல்லவா? நல்லதோ, கெட்டதோ, இருவரிடமும் ஏதேனும் சில பல மாற்றங்கள் ஏற்பட்டுதான் இருக்கும். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டு, காதலையும், கவர்ச்சியையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

காதல் தானாக சாகாது. நீங்களாக அதன் கழுத்தைத் திருகிக் கொன்றால்தான் உயிர்விடும். இன்றைக்கு தினப்படி அதை முறையாகப் பராமரித்து, உயிர்ப்போடு வைத்திருந்து பாருங்கள். அந்த அமுதின் ருசியைத் தொடர்ந்து சுவைக்கலாம்!

SONY ஆகியோ மோரிடா....

ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

sony ஆகியோ மோரிடாவிடம் இருந்து பத்து பாடங்கள் :
புதிய பாதையில் பயணி :
இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப
பிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !
முயன்றால் எதுவும் சாத்தியம் :
375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.
ஆய்வு செய் ! அற்புதம் நிகழும் :
லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்து சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். npn என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதை தயாரிக்கஉரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாக சொன்னதை கேட்டது. அப்பொழுதைய ஜாம்பாவன் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளை தொடர்ந்தார்கள். துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tunneling effect' ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸாக தந்தது
பெயரும் முக்கியம் ஜெயிக்க :
ஏழை நாடாக இருந்த ஜப்பானை விட அடித்துக்கிளப்பும் அமெரிக்கா நல்ல சாய்ஸ் என்று பட்டது மோரிடாவுக்கு. அங்கே போய் கம்பெனி நடத்தலாம் என்று முடிவு செய்த பொழுது ஈர்க்கும் ஒரு
பெயருக்கு அலைந்தார்கள். இலத்தீனில் ஒலியை குறிக்கும் சோனஸ் தாக்கத்தில் சோனியை வார்த்தார்கள். தரமும் சேர்ந்து கொள்ள சோனி சாதித்தது !
குறைத்து எடை போடாதே உன்னை :
அமெரிக்காவின் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்திருந்தார்கள் சோனி. அன்றைக்கு ஷேர்களின் விலை என்ன என்று அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆள் ரூமில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். விலையை
அறிவிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் நிலவரம் என்ன என்று விசாரித்தால் அதிர்ச்சி ! பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் ஓயாமல் அழைத்து விலையென்ன என்று கேட்கிறார்கள். மதிப்பு
வெகு உச்சத்தில் இருக்கிறது என்று சொன்னதும் டாப் விலை சொன்னார்கள் !
தேவைகளில் இருந்து புதிதைத்தருக :
பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களை கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டு பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியை படைத்தார்கள். அதை ஆங்காங்கே எடுத்து  அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடா. பின்னர் நண்பர் இபுகா இப்படி சத்தமாக கேட்கவும் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல ஹெட்செட் என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். அப்படியும் இளைஞர்களின் கனவுப்பொருளான வாக்மேன் வந்தது இப்படித்தான்!
தவறுகளை ஒத்துக்கொள் :
கால்குலேட்டர் பிஸினசில் நுழைந்திருந்தது சோனி. பல ஜப்பானிய நிறுவனங்களும் அதில் ஈடுபட்டதால் பெரிதாக வருமானம் கிடைக்காமல் அந்த தொழிலை மோரிடா இழுத்து மூடிவிட்டார். ஆனால்,அதை அப்படியே வைத்திருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் உலகை முற்றுகையிட்ட கணினித்துறையில் இன்னமும் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் அவர்
குடும்பம் நிறுவனம் :
சோனியில் தலைமை அதிகாரிக்கும், அடுத்தடுத்து இருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள விகித வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. எல்லா நபர்களையும் குடும்பம் போல நடத்துவார்கள். வெறும் பட்டம் மட்டுமே திமைக்கு அளவுகோலாக கொள்ளப்படாமல் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறி கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் தருவது உறுதி செய்யப்பட்டது ! கோக கோலா, ஜெனரல் மோட்டர்ஸ் என்று டாப் நிறுவனங்களுக்கும் மேலே அமெரிக்காவில்
நம்பகத்தன்மை பெற்று நின்றது சோனி !
விளம்பரம் கொஞ்சம் வில்லங்கம் :
ஒரு புதிய கருவியை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருந்தார் மோரிடா. அது பெரிய ஹிட் அடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் ஒழுங்காக விற்க வைக்க அதிகபட்ச விளம்பரங்களை செய்யச்சொல்லி ஏஜ் இருந்த அதிகாரிக்கு உணர்த்த ,"இவ்வளவு மில்லியன் டாலர் நீங்கள் செலவு செய்யவேண்டும் ! இல்லையென்றால் வீட்டுக்கு போக வேண்டியது தான் !" என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே செலவு செய்தார் அந்த அதிகாரி. என்ன ! மற்ற பொருள்களுக்கான விளம்பரத்தை குறைத்து அதை இந்த புது குழந்தைக்கு திருப்பி எப்பொழுதும் ஆகும் செலவுக்குள்ளேயே சாதித்தார்!
செய் ! செய்யாதே !:
"தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ,ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் " என்பதை தன் தாரக மந்திரமாக கொண்டிருந்த அகியோ மோரிடா ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ரோல் மாடல். மேட் இன் ஜப்பான் என்கிற பிராண்டை உலகத்தின் தரத்தின் உச்சமாக மாற்றிய உழைப்பில் எண்ணற்ற நாட்டு மக்களை ஈடுபடுத்திய அவரும்,அவர் தோழர் இபுகாவும் ,"எதுவும் முடியாது என்று சொல்லத்தெரியாத நாடு ஜப்பான் !" என்றே அறியப்பட வேண்டும் என்றார். பெயர் மாறினாலும் நம் நாடும் அப்படி ஆக பயணிப்போம் !
உலகப்போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில் நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள் .1946 இல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள் .முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை ;பார்த்தார் மனிதர் .பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள்; மாபெரும் வெற்றி பெற்றது அது  .அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி ,வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள் .உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்  என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.
அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சி கரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர் ; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம் .சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார் ;நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார் ;.ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்கா விட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர் .அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர் ;ஜப்பானியர்
என்கிற பெருமையை அவர் விடவில்லை .அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார் ;எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில்  மக்களால் பார்க்கப்பட்டது .தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர் .என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்குரோல் மாடல்  அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத்தெரியாத ஜப்பான் -அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த  நாள் இன்று
- பூ.கொ.சரவணன்